வடக்கில் சீரற்ற காலநிலை நிலவிவருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக சித்தாண்டி சந்தனமடு ஆறு பெருக்கெடுத்துள்ளது.
காத்தான்குடி நாவற்குடா மாமங்கம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரியவட்டவான், பெருமாவெளி இலுக்குப்பொத்தானை, ஈரளக்குளம், போன்ற கிராமங்களுக்கு போக்குவரத்திலும் பொது மக்கள் சிரமமங்களை எதிர் நோக்கியிருந்தனர்.
இதனைக் கருத்திற்கொண்டு ஏறாவூர்பற்று சித்தாண்டி சந்தனமடு ஆற்றின் இறங்கு துறைக்கான படகுச் சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாண நகரப்பகுதி மற்றும் தாழ்நிலப்பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.