தனக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, இந்த கோரிக்கை குறித்து எதிர்வரும் 25ஆம் திகதி விடயங்களை தெளிவூட்டுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன சட்ட மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டமையினால், அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டதாக கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினர் மீது தாக்கல் செய்யப்பட்ட மனு கொழும்பு வணிக நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 26ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.