கொரோனா வைரஸ் – அமெரிக்காவில் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 2.5 மில்லியனைக் கடந்தது

232 0

அமெரிக்கா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2.5 மில்லியனைக் கடந்துள்ளளது.

கடந்த வாரங்களில் வணிக நிறுவங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தென் மாநிலங்களில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

நேற்று சனிக்கிழமையன்று, புளோரிடாவில் 9,500 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகளும் 39 புதிய மரணங்களும் பதிவாகியுள்ளன.

அந்தவகையில் அங்கு இதுவரை 1 இலட்சத்து 32 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 ஆயிரத்து 392 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

மேலும் டெக்சாஸ் மாநிலத்தில் 6 ஆயிரத்து 79 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 1 இலட்சத்து 48 ஆயிரத்து 845 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 39 புதிய இறப்புக்களுடன் டெக்சாஸ் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்திய மாநிலமான நியூயோர்க்கில் 4 இலட்சத்து 16 ஆயிரத்து 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 31 ஆயிரத்து 452 பேர் உயிரிழந்துள்ளனர்