தொற்று இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பினால் அனுமதி அளிக்கப்படும் – ஆர்.பி உதயகுமார்

286 0
மதுரையில் கூடுதல் தொற்றுக்கு யார்‌ காரணம் என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. சென்னைக்கு நிகரான சிகிச்சை வசதியை மதுரையில் மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

மதுரை ஒத்தக்கடை கொரோனா தனிமை மையத்தை ஆய்வு செய்தபின் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர் சந்தித்தபோது,”மதுரை மாவட்டத்தில் 35 லட்சம் பேர் வசிக்கின்றனர். 1477 பேருக்கு தொற்று ஏற்பட்டு 553 பேர் குணமாகியுள்ளனர். இது தான் எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. இறந்தவர்கள் பிற நோய்களால் இறந்துள்ளதாக அவர்களது உடல்நல வரலாறு சொல்கிறது. 1400 களப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீடு வீடாக நோய் தொற்றை கண்டறியும் பணி மதுரையில் நடந்து வருகிறது.

கொரோனா தனிமை முகாமிற்கு வருபவர்களுக்கு மனநல மருத்துவர்கள் கவுன்சிலிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.