ஈரானின் ஆயுத விநியோக தடையை நீடிக்குமாறு கோர அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை!-ஐ.நா. தூதர் மஜித் ரவன்சி

236 0

ஈரானின் ஆயுத விநியோக தடையை நீடிக்குமாறு கோர, அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை என ஈரானுக்கான ஐ.நா. தூதர் மஜித் ரவன்சி தெரிவித்துள்ளார்.

ஈரான், பிற நாடுகளுக்கு ஆயுத விநியோகம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீடிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளதன் பின்னணியில், இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. தூதர் மஜித் ரவன்சி கூறுகையில், ‘ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்காவுக்கு, ஆயுத விநியோக தடையை நீடிக்குமாறு கோர எந்த உரிமையும் இல்லை.

அதை மீறி தீர்மானம் கொண்டு வந்தால், அது அமெரிக்கா செய்த மிகப் பெரிய தவறாகவே இருக்கும். அந்த தீர்மானத்தை ஈரான் முறியடிக்கும்’ என கூறினார்.

ஈரான், பிற நாடுகளுக்கு ஆயுத விநியோகம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.