அமெரிக்காவில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!

284 0

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் 47,341பேர் புதிதாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 663பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவே அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.

இதற்கு முன்னதாக நேற்று முன் தினம் 40,184பேர் பாதிக்கப்பட்டதே நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது.

அதேவேளை பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்தாலும், உயிரிழப்பின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.

2,500 என்ற நிலையில் சென்ற நாளொன்றுக்கான உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது ஆயிரத்திற்குள் நகர்கின்றது.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மிகப்பெரிய பாதிப்பினை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 25 இலட்சத்து 52 ஆயிரத்து 956ஆக உள்ளது. மேலும், வைரஸ் தொற்றினால் 1 இலட்சத்து 27 ஆயிரத்து 640பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 1,356,613பேர் வைரஸ் தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 1,068,703பேர் குணமடைந்துள்ளனர். 15,765பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.