இராணுவ சதியை மேற்கொள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பார்த்துக் கொண்டிருப்பது பயனற்ற செயற்பாடு எனவும், அவ்வாறானதொரு செயற்பாடு ஒருபோதும் இடம்பெறாது எனவும் அமைச்சர் பீ.ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இராணுவச் சதி இடம்பெற வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார் என சுட்டிக்காட்டிய ஹெரிசன், இது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற போதே இது குறித்து கிசு கிசுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், எமது இராணுவம் எமக்கு அவ்வாறானதொரு சிரமத்தை அளிக்க மாட்டார்கள் எனவும் அமைச்சர் பீ.ஹெரிசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.