ஆனோல்ட்டின் ஆதரவாளர்களான ஆறு ஊழியர்களை நீக்குவதற்கு யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது

259 0

யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட்டின் ஆதரவாளர்களான ஆறு ஊழியர்களை நீக்குவதற்கு யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட், தனது பணியாளர்களாக 6 பேரை நியமித்து வைத்திருந்தார். அவர்களின் நடவடிக்கை குறித்து ஏற்கனவே பல தரப்பினரால் விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ஆனொல்ட் களமிறங்கியபோது, அவர் விடுமுறை பெற்றிருந்தார். இதன்போது, தான் மீண்டும் கடமையேற்கும் வரை 3 பேரை விடுப்பில் அனுப்பியிருந்தார். எஞ்சிய மூவரும் சம்பளம் பெற்று வந்தனர்.

அதனை சுட்டிக்காட்டி, அவர்களையும் விடுப்பில் அனுப்ப இன்று யாழ் மாநகரசபையில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்போது, யாழ் மாநகரசபை பிரதி முதல்வர் பிரேரணையை வாக்கெடுப்பிற்கு விடுவதாக அறிவித்தார்.

யாழ் மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பெரும்பான்மையில்லாத நிலையில், அமர்வுகளில் ஆனோல்ட் வாக்கெடுப்பை அனுமதிப்பதில்லை. எனினும், இன்று ஈசன் வாக்கெடுப்பை அறிவித்தார்.

வாக்கெடுப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி, சுதந்திரக் கட்சியின் 17 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். ஐ.தே.கவின் 3 உறுப்பினர்கள், ஈ.பி.டி.பியின் ரீகன் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.