மகிந்த ராஜபக்ஸ நாளை சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம்

305 0

mahinda_rajapaksa-1சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாளைய தினம் மேற்கொள்ளவுள்ளார்.

மகிந்த ராஜபக்ஸவுடன் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் பயணிக்கவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மகிந்த சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.