வடமாகாண முதலமைச்சர் தனது பிள்ளைகளை பௌத்த மதத்தினருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளார். அதேபோல நடேசன் நிருபமா ராஜபக்ஷவை திருமணம் முடித்துள்ளார். நிருபாமா முன்னைய ஜனாதிபதி மகிந்தவின் சகோதரி.
அப்படியானால் மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் மச்சான் தானே ஏன் சண்டை போடுகிறீர்கள். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் ஆறுமுகநாவலர் மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை நேர நிகழ்வு நேற்றைய தினம் நல்லூர் துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எல்லா சமயமும் நல்லதை தான் சொல்லி இருக்கிறது. ஆனால் அனைத்துலகிலும் யுத்தம் நடந்ததிற்கு அடிப்படை காரணமாக மதம் தான் உள்ளது.
இந்து சமயமும் பௌத்த சமயமும் சகோதரம் போலானவை. இந்த உலகத்தின் மிகப் பழைமை வாய்ந்த சமயம் இந்து மதம். அதன் பின்னர் பௌத்தம் பின்னர் கிறிஸ்தவம் அதன் பின்னர் இஸ்லாம் மதம் எனப் பல உருவாகின. அந்த வகையில் பௌத்த சமயமும் இந்து சமயமும் ஒரே மாதிரிதான் உள்ளது.
விகாரைகள் உள்ளே இந்துக் கடவுள்களின் விலையுள்ளது. தெய்வங்கள் அனைத்தும் ஒற்றுமையாக உள்ளார்கள் சமாதானமாக உள்ளார்கள். அதை வணங்குவதற்கு செல்பவர்கள் தான் சண்டைபிடிக்கிறார்கள்.
வடமாகாண முதலமைச்சர் தனது பிள்ளைகளை பௌத்த மதத்தினருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளார். அதேபோல நடேசன் நிருபமா ராஜபக்ஷவை திருமணம் முடித்துள்ளார்.
நிருபாமா முன்னைய ஜனாதிபதி மகிந்தவின் சகோதரி. அப்படியானால் மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் மச்சான் தானே ஏன் சண்டை போடுகிறீர்கள்.
அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேட்டுக்கொண்டுள்ளார்.