சிறிலங்காவில் வைபவங்களில் பங்குகொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பு

243 0

சிறிலங்காவில் திருமண வைபவம் மற்றும் ஏனைய வைபவங்களில் பங்குகொள்வோரின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கான ஆலோசனை தற்போது கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக தொழிற்சாலை ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அகில இலங்கை மண்டப மற்றும் உணவு விநியோக சங்கத்தினருடக்கிடையில் நேற்று (23) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த பேச்சுவார்த்தை பியகமவில் அமைந்துள்ள வைபவ மண்டபத்தில் நடைபெற்றது.

கொவிட் 19 தொற்று பரவலையடுத்து திருமண வைபவம் மற்றும் ஏனைய வைபவங்களில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை போதுமானதல்ல என்று சங்கத்தினர் இதன் போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதுடன் தற்போது எதிர்கொண்டுள்ள நிலையில் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமம் என்று குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக தாம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறினார்.