யாழ்ப்பாணத்துடன் இணையும் அமெரிக்காவின் நகரம்!

262 0

politi1அமெரிக்காவின் ஸ்ரேலிங் ஹைட்ஸ் நகரசபை. யாழ்ப்பாணத்துடன் சகோதர நகர பங்குடமை தொடர்பில் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.இந்த யோசனை நவம்பர் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.மேலும், யாழ்ப்பாண நகரம் 88ஆயிரம் குடியிருப்பாளர்களை கொண்ட பல நூற்றாண்டு கலாச்சார நகரமாகும்.

அமெரிக்காவின் ஸ்ரேலிங் ஹைட்ஸ் நகரம், 129ஆயிரத்து 699 பேரைக்கொண்ட நகரமாக விளங்குகின்றது.இந்த நகரம், அமெரிக்காவின் மிச்சிக்கன் பிரதேசத்தின் புறநகர் பகுதியான அந்த பிரதேசத்தின் நான்காவது பெரிய நகரமாக காணப்படுகின்றது.

குறித்த நகரத்துக்கு 1991ஆம் ஆண்டு ஐரோப்பிய இனத்துவக்குழு மக்கள் குடியேறினர். கடந்த 2010ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி ஸ்ரேலிங் ஹைட்ஸ் நகரில், 85.1 வீத வெள்ளையர்கள், 5.2வீத ஆபிரிக்க அமெரிக்கர்கள், 6.7வீத ஆசியர்கள் வாழ்கின்றனர்.

ஏற்கனவே ஸ்ரெலிங் ஹைட்ஸ் நகரம், பிலிப்பைன்ஸின் லெகாஸ்பி. அல்பேனியாவின் சேன்ஜின் ஆகிய நகரங்களுடன் சகோதர நகர பங்குடைமையை ஏற்படுத்திக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.