50 லட்சத்தை கடந்தது கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை

269 0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 93 லட்சத்து 52 ஆயிரத்து 725 பேருக்க்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 38 லட்சத்து 31 ஆயிரத்து 777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 911 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 79 ஆயிரத்து 778 பேர் பலியாகியுள்ளனர்.
கோப்பு படம்
ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 50 லட்சத்து 41 ஆயிரத்து 170 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-
அமெரிக்கா – 10,20,381
பிரேசில் – 6,13,345
ரஷியா – 3,56,429
இந்தியா – 2,48,190
பெரு – 1,48,437
சிலி – 2,10,570
இத்தாலி – 1,84,585
ஈரான் – 1,69,160
ஜெர்மனி – 1,75,700
துருக்கி – 1,62,848
மெக்சிகோ – 1,44,448
சவுதி அரேபியா – 1,09,885