ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

291 0

201611220835376491_strong-quake-hits-northeastern-japan-tsunami-warning-issued_secvpfஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக கடலில் ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்து கரைப்பகுதியை சீண்டின.

புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 3 மணியளவில்) பூமியின் அடியில் 11.3 கிலோமீட்டர் ஆழத்தில் உண்டான இன்றைய நிலநடுக்கத்தை ஜப்பானின் புவியியல்சார் ஆய்வு நிறுவனம் ரிக்டர் அளவுக்கோலில் 7.3 ஆக பதிவு செய்திருந்ததது.

எனினும், பின்னர் அமெரிக்க புவியியல்சார் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவிலானது, என்று தெரியவந்தது.

இன்றைய நிலநடுக்கம் உருவான பகுதியில்தான், புகுஷிமா டாய்ச்சி என்ற ஜப்பானின் அணுமின்சார உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளதால் இந்த பகுதியை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சுனாமி எனப்படும் பேரலைகளின் எழுச்சியால் புகுஷிமா அணுஉலையில் இருந்த மூன்று ‘ரியாக்டர்’கள் உருகியதும், சுமார் 18 ஆயிரம் பேர் இறந்தும், காணாமல் போனதும் நினைவிருக்கலாம்.

இதேபோல், இங்குள்ள குமாமோட்டோ பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்கள் மற்றும் அதன் விளைவாக 1,700 முறை உண்டான நிலஅதிர்வுகளால் 50-க்கும் அதிகமானவர்கள் பலியானதும், பெருத்த சேதம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.