திருப்பதியில் பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஸ்வைப் வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் தேவஸ்தானம் வாடகை அறை பெறும் இடம் லட்டு டோக்கன் பெறும் இடம் என பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஸ்வைப் இயந்திரத்தை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு பணத்துக்கான சிரமம் இருக்காது.
மேலும் ஏழுமலையான் கோவிலுக்குள் வெள்ளி வாசல் அருகில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தற்போது புதியதாக தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்முறைக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.