சிறிலங்காவில் பிறந்து 2 நாளான குழந்தை காட்டில் இருந்து மீட்பு

276 0

சிறிலங்கா- அம்பலந்தோட- மிரிஜ்ஜவில, நவகமிகொட பகுதியிலுள்ள காட்டில் பிறந்து 2 நாளான  குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மிரிஜ்ஜவில மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவ்விடத்துக்கு  சென்ற பொலிஸார், குறித்த குழந்தையை மீட்டு, அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அம்பலந்தோட்டாவில் உள்ள மிரிக்ஜாவிலா பகுதியில் வசிப்பவர்கள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த  பகுதியில் வெள்ளைக் துணியால் மூடப்பட்ட நிலையில்  குழந்தையை கண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்தே இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் குழந்தை தற்போது, அம்பாந்தோட்டை வைத்தியசாலை குழந்தை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாத பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குழந்தையை  கைவிட்டு சென்ற சந்தேகநபர் தொடர்பாக, பொலிஸார்  தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.