இங்கிலாந்தில் பயங்கரம்: பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கத்திகுத்து தாக்குதல் – 3 பேர் பலி

247 0

இங்கிலாந்து நாட்டில் பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய கத்திகுத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

இங்கிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் ரிடிங் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரின் மையப்பகுதியில் பார்பெரி என்ற பூங்கா அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் பொழுதை கழிப்பது வழக்கம்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த பூங்காவில் அமர்ந்தும், விளையாடியும், ஓய்வு எடுத்தும் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 25 வயது நிரம்பிய பயங்கரவாதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பூங்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தவர்களை கண்மூடித்தனாக குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தினான்.
இதனால், அந்த பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தனர்.
அப்போது பயங்கரவாதி அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்களை குறிவைத்து கொடூரமாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்.
பயங்கரவாதி சத்ஹல்லா
இந்த கொடூர தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரனையில் அவனது பெயர் ஹைரி சயதுல்லா என்பது அவனது சொந்த நாடு லிபியா என்பது தெரியவந்துள்ளது.
ரிடிங் நகரில் வசித்து வந்த பயங்கரவாதி சத்ஹல்லா வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புடன் இணைய வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த தாக்குதல் நடத்தி இருக்கலாம் எனவும் மேலும், பயங்கரவாதியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.