தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைந்து அஞ்சலி செய்யும் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமானது.
உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை பல்வேறு இடங்களிலும் நினைவுகூருவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தவகையில் பிரித்தானியாவிலுள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உருத்துடையோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
மாவீரர் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் உருத்துடையோரை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இதனை தமிழீழ மாவீரர் பணிமனையும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மாவீரர் குடும்பம் மற்றும் போராளிகள் நலன்காக்கும் அமைச்சும் இணைந்து நடாத்தியது.
இந்த நிகழ்வில் 150ற்கும் மேற்பட்ட மாவீரர் குடும்பங்கள் கலந்துகொண்டிருந்ததோடு, போராளிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.