இலங்கையில் இராணுவ புரட்சி உறுதி – மஹிந்த சூளுரை

352 0

mahinda-rajapaksa-reuters_650x400_81439909591கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இலங்கையில் இராணுவ புரட்சி ஒன்று இடம்பெறவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார்.

கேகாலையில்இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொணடு கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்திருந்த கருத்து இராணுவத்தை எந்த வகையிலும் அகௌரவப்படுத்தாக இருக்கவில்லை.

தற்போது இலங்கையில், பொலிஸ் ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது. இது போன்ற நிர்வாகம் உள்ள உலக நாடுகளில் அனைத்திலும் இராணுவ ஆட்சியொன்று நடைபெற்றுள்ளது.

எனவே, இலங்கையிலும் இவ்வாறான நிலை தொடருமானால், அதேநிலை, ஏற்படலாம் என்ற நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.