பிரான்சின் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ் இளைஞர் ஜெயகுமார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவீரர்நாள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கிக்கொண்டிருந்த போதே இனம் தெரியாத சிலர் குறித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாள் வெட்டில் காயமடைந்த இளைஞர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.