யோக விஞ்ஞானத்தை வாழ்வின் அங்கமாக்க வேண்டும் – சத்குரு யோகா தின வாழ்த்து

224 0

யோக விஞ்ஞானத்தை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வின் அங்கமாக்கி கொள்ள வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், யோக விஞ்ஞானத்தை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வின் அங்கமாக்கி கொள்ள வேண்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எல்லாருக்கும் உலக யோகா தின வாழ்த்துக்கள். கொரோனா வைரஸ் என்ற மகத்தான சவால் நம் தலைமுறைக்கு எதிர்மறையாக நின்றுள்ளது. துருதிருஷ்டவசமாக இறப்பு என்பது  நம் வாசலுக்கே வந்துள்ளது.
கொரோனாவுக்கு எந்தவிதமான மருந்தும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இதற்கு தீர்வு இல்லாததை போல் தெரிகிறது. ஆனால், இப்போது நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு தீர்வு நம் ஆரோக்கியத்திற்காக உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த வேண்டும். அதற்கு இந்த உலக யோகா தினத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த நாளில் ஒரு எளிய யோகா பயிற்சியை கற்றுக்கொண்டு அதை தினமும் செய்து வர வேண்டும். நம் உடலும், உயிர் சக்தியும் நமது நன்மைக்காக செயல்பட வேண்டும். யோக விஞ்ஞானத்தை அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் அது ஒரு மகத்தான உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.