பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளரை பணி நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் மூளையில் செயற்படுகின்றார்.
கோத்தபாயவை போன்றதொரு பாதுகாப்புச் செயலாளர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு தேவையில்லை.
பாதுகாப்புச் செயலாளர் பதவி இன்று வலுவான ஓர் பதவியாக மாற்றம் பெற்றுள்ளது.
சட்டம் அனைவருக்கும் ஒரே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
பாதுகாப்புச் செயலாளர் பதவியை வகித்துக் கொண்டு நண்பர்களுக்கு ஒரு விதமாகவும் ஏனையோருக்கு மற்றோர் விதமாகவும் செயற்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.