ஆவா குழுவினை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தப் போவதில்லை – பாதுகாப்புச் செயலாளர்

325 0

9606ஆவா குழுவினை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

ஆவா குழு ஒர் பயங்கரவாத குழு அல்ல எனவும் இதனால் இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவினை கைது செய்து கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாரைச் சாரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் ஆவா குழுவினை கட்டுப்படுத்துவதற்கு உதவி செய்யுமாறு பொலிஸார் கோரினால் இராணுவத்தினர் தேவையான உதவிகளை வழங்குவார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.