இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளுக்காக மாத்திரம் தொலைக்காட்சி சேவை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 3 மாதக்காலப்பகுதியில் இந்த நடவடிக்கை பூர்த்திச்செய்யப்படும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அரச தொலைக்காட்சி சேவையான ஐ அலைவரிசையில் நேற்று முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒளிப்பரப்பாவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அரசியலமைப்பு பேரவை தொடர்பான அமர்வுகளும் நேரலை செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் கரு ஜெயசூரிய குறிப்பிட்டார்.