கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மே 6-ந்தேதி எல்லை தாண்டினர்: சீனா மீண்டும் அபாண்ட குற்றச்சாட்டு

240 0

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மே 6-ந்தேதி இந்திய வீரர்கள் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை தாண்டி சென்றதாக சீனா மீண்டும் அபாண்டமாக குற்றம் சாட்டி உள்ளது.

லடாக்கின் கிழக்கே கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவியதால் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மே 5 மற்றும் 6-ந்தேதிகளில் மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை குறைப்பதற்காக நடந்த பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் படை விலக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தன.
இந்த பணிகளின்போது கடந்த 15-ந்தேதி இரவு மீண்டும் இருதரப்பும் மோதிக்கொண்டன. இதில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனா தரப்பில் 35 பேரும் உயிரிழந்தனர். கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா ஊடுருவியதே இந்த மோதலுக்கு காரணம் என இந்தியா கூறியுள்ளது.
ஆனால் இந்திய வீரர்கள் எல்லை தாண்டியதால்தான் இந்த மோதலும் உயிரிழப்பும் ஏற்பட்டதாக சீனா குற்றம் சாட்டியது. கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தமானது எனவும், அந்த பகுதியில் கடந்த மாதம் 6-ந்தேதி இந்திய வீரர்கள் எல்லை தாண்டியதாகவும் மீண்டும் அந்த நாடு அபாண்டமாக குற்றம் சாட்டி உள்ளது.