ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

347 0

news_14-11-2015_92japanஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் ஃபுகுஸிமா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.3 என பதிவாகியுள்ளதாகவும் இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இவாக்கி நகரில் 10 கி.மி ஆழத்தில் இந்த நிலண்டுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

5 ஆண்டுகளுக்கு முன்னர் 9.1 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் இதுதான் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.