இலங்கையில் இனவாத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன – சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

395 0

2015-07-05-02_00_31-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81இலங்கையில் இனவாத செயற்பாடுகள் தலை தூக்கியுள்ளமை குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

எனவே, இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் கருத்து தெரிவிக்கையில்,
அண்மைய நாட்களாக இலங்கையில் ஆபத்தான உரைகளை அவதானிக்க முடிகின்றது.

இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு உள்ளது.

இதனிடையே, உலகின் பல பகுதிகளில் பகைமைப் பேச்சு மற்றும் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.