வடக்குமாகாணபாடசாலைகளின் சாதனையாளர்கள் கௌரவிப்புநிகழ்வு(காணொளி)

357 0

prizeவடக்குமாகாணபாடசாலைகளில் சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் இறுதிநாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தில் வடக்குமாகாணகல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் வடக்கு மாகாணத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்குமேல் பெற்றுக்கொண்ட அனைத்து பாடசாலைகளும் கௌரவிக்கப்பட்டன.வடக்குமாகாணபாடசாலைகளில் சுகாதாரம்போசாக்குதொடர்பாக இடம்பெற்றபோட்டிகளின் வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், நூலகப் போட்டியின் வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் பிரதமவிருந்தினராக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபையின் பிரதம கணக்காளர் எஸ்.யு.சந்திரகுமரன்,மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.