கிளிநொச்சிமாவட்டதனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தின் வருடாந்தபொதுக்கூட்டமும்புதியநிர்வாகதெரிவும் கிளிநொச்சிமாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்திற்குபிரதமவிருந்தினராகவடக்குமாகாணபோக்குவரத்துஅமைச்சர் பா.டெனிஸ்வரன்சிறப்புவிருந்தினர்களாகவடமாகாணபோக்குவரத்துஅதிகாரசபையின் தலைவர் அ.நீக்கிலஸ்பிள்ளை,வடமாகாணதனியார் பேருந்துஉரிமையாளர் சங்கஒன்றியத்தின் தலைவர்,கிளிநொச்சிமாவட்ட இலங்கைபோக்குவரத்து சபை சாலைமுகாமையாளர், ஏனைய மாவட்டங்களின் தனியார் பேருந்துசங்கத்தின் தலைவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்துசிறப்பித்தமைகுறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் உரையாற்றியவடக்குமாகாணபோக்குவரத்துஅமைச்சர்,
வீதிவிபத்துக்களைகுறைப்பதுதொடர்பில் உரிமையாளர்களும்இசாரதிகளும் கூடுதல் கவனம் எடுக்கவேண்டும்.குறிப்பாகமாணவர்கள் மற்றும் முதியவர்கள்மட்டில் சாரதி,நடத்துனர்கள் ஒழுக்கமானமுறையிலும் கௌரவமானமுறையிலும் நடத்தவேண்டும்.பொதுமக்களுக்குசௌகரியமானசேவையைவழங்கவேண்டும்.
மேலும் போக்குவரத்தோடுதொடர்புபடுகின்றசங்கங்களில் பலசங்கங்களில் நிதிமோசடிகள் காணப்படுகின்றன.கொடுக்கப்பட்டகடன்கள் வசூலிக்கப்படாது இழுபறிநிலையில் நிலுவையாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறானமுறைகேடுகளுக்குஅந்தந்தகாலப்பகுதியில் இருந்தசங்கஉறுப்பினர்களும் புதிதாகபதவிஏற்பவர்களும் உரிமையாளர்களுக்குபொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்கள்.சங்கநிர்வாகத்தில் உள்ளவர்கள் உரிமையாளர்களின் நலன் தொடர்பில் கூடியஅக்கறைசெலுத்தவேண்டும். உரிமையாளர்கள் சங்கத்தின் ஆக்கபூர்வமானநடவடிக்கைகளுக்குபக்கபலமாக இருக்கவேண்டும்.
மேலும் எதிர்வரும் வருடம் தைமாதம் போக்குவரத்துதொடர்புபடுக்கின்றஅனைத்துநலன்புரிச்சங்கங்களும்இபோக்குவரத்துநியத்திச்சட்டத்துக்குஅமைவாகஅதிகாரசபையின் கீழ் பதிவுசெய்யவேண்டும்.
சங்கங்களின் நிதிசார்ந்தவிடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்டப்படியானகணக்காய்வுகள் மேற்கொள்ளவேண்டும்.
மோசடிகள் காணப்படின் அதற்குஎதிராகசட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அத்துடன் வழி அனுமத்திப்பத்திரத்தைவைத்திருப்போர் சட்டமுரணாகஅதனைஏனையவர்களுக்குவிற்றிருப்பின்,அனுமதிப்பத்திரத்தைகொடுத்தவர்களுக்கும் அதனைவாங்கியவர்களுக்கும் எதிராககடுமையானசட்டநடவடிக்கைமேற்கொள்ளப்படும்.அவ்வாறானஅனுமத்திப்பத்திரங்கள் எந்தவிதமுன்னறிவித்தலும் இன்றி இரத்துசெய்யப்படும்என்றுமேலும் தெரிவித்தார்.