இராணுவ அதிகாரிகள் 71 பேருக்கு பதவியுயர்வு

270 0

இராணுவத்தின் கேர்னல் பதவியில் இருந்த 41 அதிகாரிகள் பிரிகேடியர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், லுதினன் கேர்னல் பதவியில் இருந்த 30 பேர் கேர்னல் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் குறித்த பதவியுயர்வு அமுலுக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.