2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சர்ச்சைக்குரிய கூற்றுக்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலை மனதில் கொண்டு முன்வைக்கப்படுகின்றதா என ஹிருணிகா பிரேமச்சந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், கிரிக்கெட் அணி காரணமாகவே இலங்கை சர்வதேச புகழ் பெற்றது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர்களை இழிவுபடுத்தி இரசிகர்கள் மத்தியில் மோசமான பிம்பத்தை காட்டுவதற்காகவே மஹிந்தானந்த அளுத்கமகே இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
2011 ஆண்டு இறுதி போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களின் முகத்தில் தெரிந்த சோகம் போட்டியினை கண்டுகளித்தவர்களே அறிவார்கள் என்றும் பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் மஹிந்தானந்த அளுத்கமகேவின் தேர்தல் தந்திரங்களில் இதுவும் ஒன்று என்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர சுட்டிக்காட்டினார்.