தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் – சாள்ஸ்

264 0

தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் முனைப்பு இடம்பெறும் போது தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியா தரணிக்குளம் புதியநகரில் இடம்பெற்றற  தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் தெரிவிக்கையில், ”வவுனியாவில்  வனஜீவராசி, மகாவலி திட்டங்களின் ஊடாக சிங்கள மக்களை குடியேற்றும் செயற்பாடு தீவிரமாக இடம்பெற்றிருந்தது. இதனை செய்த கடந்த ஆட்சியாளர்களே தற்போதும் ஜனாதிபதியாகவும், அரசாங்கமாகவும் உள்ளனர்.

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் தமிழ் மக்களின் 140 ஏக்கர் காணி பயன்படுத்தப்படாத நிலையில் காணப்பட்டதோடு ஜனாதிபதி தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் அக்காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்குகின்ற செயற்பாடு காணப்பட்டது.இதனை நான்  நாடாளுமன்றத்திலும் தெரியப்படுத்தியிருந்தேன்.இவ்வாறான நிலையில் தமிழர்கள் ஒர் அணியாக நிற்கவேணண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை முதல் திருகோணமலை வரை இன வீதாசாரத்தை இல்லதொழிப்பதற்கான நடவடிக்கையே எடுத்து வருகின்றனர். 09 மாகாணங்கள் இருக்கின்ற போது கிழக்கு மாகணத்திற்கு மட்டும் தொல்பொருளுக்கான செயலணியாக தமிழர்கள் இல்லாத செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனவே இச்சூழலில் தமிழ் மக்கள் நிதாணித்தும் ஒன்றித்தும் செயற்பட வேண்டிய தேவை உள்ளது. தமிழ் மக்களுக்கான கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதனால் அதில் ஒரு சிலரின் கருத்துக்கள் மக்களினால் ஏற்றுக்கொள்ள முடியாதாக இருந்தாலும் அதனை கூட்டமைப்பின் கருத்தாக ஏற்றுக்கொள்ள கூடாது”என தெரிவித்துள்ளார்.