கருப்புப் பண ஒழிப்பு என்பது பொய். பணக்கார முதலாளிகளின் கருப்புப் பணத்தைக் காக்கவே பாஜக- மோடி அரசு இந்த சதியில் ஈடுபட்டுள்ளது. ஏழைகளின் சேமிப்புப் பணத்தை தனியார் வங்கி மூலம் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கவே இந்த நாடகம். மோடி அரசின் சதித் திட்டதின் பின்னணியை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் 20-11-2016 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
அம்பானிக்கும், அதானிக்கும் வட்டியில்லா கடன் கொடுக்க ஏழைகளிடமிருந்து வரியை பறிக்க முயலும் மோடி அரசைக் கண்டிப்போம். கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் முடக்கி இருக்கிறது மோடி அரசு. கூட்டுறவு வங்கிகள் மூலமே விவசாயிகளும், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் பலன் பெற்று வந்தார்கள். விவசாயிகள் அதிகம் கடன், முதலீடு செய்யும் இந்த காலத்தில், இந்த வங்கிகளை திட்டமிட்டே முடக்கி இருக்கிறது. 1% பணக்கார முதலாளிகளின் நலனுக்காக 99% மக்களாகிய நாம் குற்றவாளிகளைப் போல் தெருவில் நிறுத்தப்பட்டிருக்கிறோம்.
அம்பானியும், அதானியும் வட்டியில்லா கடனைப் பெற நம் பணத்தை வங்கிக்குள் இழுக்கிறது மோடி அரசு..நம் தலையில் வரியை திணிக்கிறது. பண முதலைகளின் கருப்புப் பணமெல்லாம் கருப்பு சந்தையாக வெள்ளையாக உலவுகிறது..நாம் உழைத்து வெள்ளையாய் சம்பாதித்த பணம் கருப்பாக்கப்பட்டு நம் கையில் குற்றவாளிகளைப் போல் கருப்பு மை வைக்கப்படுகிறது.
Cashless Transaction என்ற பெயரில் மறைமுகமாக அந்நிய நேரடி முதலீட்டை(FDI) அனுமதித்து உள்ளூர் சிறு வணிகர்களின் வாழ்வை அழிக்கிறது. இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தும் விதமாகவும், எளிய மக்கள் மீது எமர்ஜென்சியை கட்டவிழ்த்து விட்டிருக்கும் மோடி அரசு பதவி விலக வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் தமிழக மக்கள் முன்னணியின் தோழர்கள் அரங்க குணசேகரன் மற்றும் பொழிலன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழ்நாடு மின்பொறியாளர் அமைப்பின் தோழர் சா.காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர் டைசன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தோழர்கள், விடுதலை சிறுத்தைகள் தோழர்கள், கோயம்பேடு கீரை வியாபாரிகள் சங்கத்தின் தோழர் பாலகிருஷ்ணன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் தோழர் பார்த்திபன் ஆகியோரும் பொதுமக்களும் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர்கள் அருள் முருகன் மற்றும் திருமுருகன் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தின் பின்னுள்ள சதிகளை அம்பலப்படுத்தி உரையாற்றினர்.
ஒட்டு மொத்த பாமர மக்களின் வாழ்வாதாரத்தையும் சேமிப்பையும் Corporateகளுக்காகவும் இந்திய பெருவணிகர்களுக்காகவும் காவு கொடுத்திருக்கும் அயோக்கிய பாஜகவும் நரேந்திர மோடியும் பதவி விலக வேண்டும் எனும் முழக்கத்தை நாட்டு மக்கள் முன்பு
மே பதினேழு இயக்கம் முன் வைக்கிறது.
காணொளி பதிவு
தோழர் அருள் முருகன் உரை
தோழர் சா.காந்தி உரை
தோழர் திருமுருகன் காந்தி உரை