150 பேருக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று நேற்று வெளியேறிய 593 பொலிஸ் கான்ஸ்டபிள்களில் 150 பேருக்கே இவ்வாறு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியேறிய முழுமையான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1012 என தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை பொலிஸ் கல்லூரி வரலாற்றில் அதிக அளவான அதிகாரிகள் ஒரே முறையில் வெளியேறிய சந்தரப்பம் இதுவென குறிப்பிடப்படுகின்றது