பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
இவ்வாறு பெறப்பட்ட கையெழுத்துக்களை நாளை மறுதினம் ஜனாதிபதி அலுவலகத்தில் மகஜராக கையளிக்கவுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தெளிவூட்டும் மாநாடு இன்று மருதானை சி.எஸ்.ஆர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதி சுந்தரம் மகேந்திரன், அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படாவிட்டால் சர்வதேச ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.