மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று முற்பகல் காவல்துறையின் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையானார்.
2017ஆம் ஆண்டு பாமாஸ் தீவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் இளைஞர் விளையாட்டு போட்டிகளை இலங்கையில் நடத்துவதன் பொருட்டான, கேள்வி பத்திர கோரளின் போது, நிதி முறைக்கேடுகள் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த விளையாட்டு போட்டிகளை இலங்கைக்கு வழங்குவதன் பொருட்டு 690 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டதாக முறைப்பட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 11.30க்கு காவல்துறையின் நிதி மோசடி விசாரணை பிரிவில் சென்ற அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி குறித்த சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் அளிக்க, அஜிட்நிவாட் கப்ரால், காவல்துறையின் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.