காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்தார் மீள்குடியேற்ற அமைச்சர்

357 0

swaminathan_valikamam_visit_002காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை ஊழியர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த மீள்குடியேற்ற அமைச்சர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

சீமெந்து தொழிற்சாலை செயலிழந்துள்ளதால் தாம் எதிர்நோக்கு பிரச்சனைகள் குறித்து பணியாளர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அத்துடன், ஊழியர்களின் காணிகள் சிலவும் தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தில் இருப்பதாக தெரிவித்த பணியாளர்கள், அவற்றை விடுவித்துதர வேண்டும் என்றும் தமக்கு வீட்டுத்திட்ட உதவியையும் அமைச்சினூடாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சர் காங்கேசன்துறை தொழிற்சாலை விடயம் அமைச்சர் றிசாட்பதியுதீனின் அமைச்சின் கீழ் வருவதால் தாம் அது தொடர்பில் அவருடன் கலந்துரையாடுவதாக குறிப்பிட்டார்

அத்துடன், காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் வீட்டுத்திட்டங்களை வழங்கும் விடயத்திலும் தமது அமைச்சினூடக மேற்கொள்ளக்கூடிய உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.