கான்பூர் விபத்து – பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

288 0

train-accident45-21-1479701045வடக்கு இந்தியாவின் கான்பூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 143ஆக அதிகரித்துள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இந்தூருக்கும் பட்னாவுக்கும் இடையிலான அதிவேக தொடருந்து நேற்று இந்த அனர்த்தத்தை சந்தித்தது.

இதில் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணியாளர்களால் இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படுகின்றன.

அத்துடன் காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விடயம் இன்று இந்தியாவின் நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

குறித்த தொடருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தல் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், 500 மற்றும் 1000 ரூபாய் நாணயத்தாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை மாற்றிக் கொள்வதற்கு வரிசையில் நின்ற 70க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தாக சுட்டிக்காட்டினர்.

எனவே அவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கோரினார்கள்.

மேலும் இந்த தடை விதிப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நாடாளுமன்றதில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியதுடன், குழப்பத்திலும் ஈடுபட்டனர்.