போக்குவரத்து விதிகள் தொடர்பான ஆறு குற்றங்களுக்கு அபராதத் தொகை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி மதுபோதையில் வாகனம் செலுத்தல், வாகன காப்புறுதி இன்மை, வாகன சாரதி அனுமதிபத்திரம் இன்மை, அதிகரித்த வேகம், இடதுபக்கத்தில் வாகனத்தை முந்திச் செல்லல் மற்றும் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளில் வாகனம் செலுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக இந்த அளவு அபராதம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று நடத்ததப்பட்டது.
இதில் தனியார் போக்குவரத்து துறை சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் உரையாற்றிய தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன, பாரிய குற்றங்களுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்படுகின்றமைக்கு தாங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
எனினும் அனைத்து வகையான விடயங்களுக்கு அபாரதம் அதிகரிக்கப்படுமாக இருந்தால், அதனை தாங்கள் எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.