கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பதவி விலக வேண்டும் என்று இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
தேசிய உற்பத்தில் 6 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்குவதாக தெரிவித்து, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
எனினும் 2016ஆம் ஆண்டிலும் பார்க்க 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் கல்விக்கு சுமார் 100 பில்லியன் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக கல்வித்துறையை முழுமையாக அரசாங்கம் தனியார் துறையின் பக்கம் தள்ளியள்ளது.
கடந்த வருடம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 38 ஆயிரத்து 850 மில்லியன் ரூபாய் செலவிடப்படவில்லை என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறி இருக்கிறார்.
இவ்வாறான நிலையில் கல்விஅமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.