சந்தேகநபர்களை விசாரிக்க அனுமதி

301 0

080625_crime_scene_murder_generic-720x480கண்டி – அக்கும்பர – பெபிலிகொல பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கித் தாக்குதல் தொடர்பில் கைதான இரண்டு பேரையும் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இது தொடர்பில் கைதான ஒருவர் கண்டியைச் சேர்ந்தவர் என்றும், மற்றையவர் ரனால பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.