கிளிநொச்சி மஹா வித்தியாலயத்தை விடுவிக்க கோரிக்கை

419 0

unnamed-1இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை சமூகம் இந்த கோரிக்கையினை எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் விடுத்துள்ளது.

கிளிநொச்சிக்கான விஜயம் ஒன்றை எதிர்கட்சித் தலைவர் இன்று மேற்கொண்டவேளை, வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.

பாடசாலை சமூகத்துடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது தவிர யுத்தம் காரணமாக பாதிப்படைந்துள்ள இந்த பாடசாலைக்குத் தேவையான வளங்களை பெற்றுத்தருமாறும் எதிர்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளை வெகுவிரைவில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக எதிர்கட்சித்தலைவர் பாடசாலை சமூகத்திற்கு உறுதியளித்துள்ளார்.