ட்ரம்புக்கு எதிராக குரல் கொடுக்க தயார் – பரெக் ஒபாமா

311 0

obamatrump-11-1478813010ஆட்சி கையளிப்பின் பின்னர் டொனால்ட் ட்ரம்ப், அமரிக்கர்களின் பெறுமதி தொடர்;பில் அச்சத்தை ஏற்படுத்தினால், அதற்கு எதிராக குரல் கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி பரெக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமரிக்காவில் சாதாரணமாக ஆட்சியில் இருந்து விலகிய பின்னர், புதிதாக பதவிக்கு வரும் ஜனாதிபதிகள் தொடர்பில், விமர்சனங்களை வெளியிடுவதில்லை.

எனினும் பெருவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய ஒபாமா, புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ட்ரம்ப் , அவரது நோக்கங்கள் குறித்து தகவல்களை வெளியிட உதவ உள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் அமரிக்காவின் பொதுமகன் என்ற அடிப்படையில் தாம் சில விடயங்கள் குறித்து கருத்துக்களை வெளியிட எதிர்ப்பார்ப்பதாகவும் ஒபாமா குறிப்பிட்டார்.