கனடாவின் டொரன்டோவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் இலங்கையில் சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் தடுத்துவைக்கப்பட்டமை தொடர்பில் நட்டஈடு வழங்கப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான முறைப்பாடு மூன்று வருடங்களுக்கு முன்னர் கனடாவில் வசிக்கும் ரோய் சமாதானம் என்பவரால் இந்த குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஜெனீவா குழுவின் தீர்ப்பை இலங்கை விரைந்த நடைமுறைப்படுத்தப்படுத்தவேண்டும் என்று சர்வதேச நீதிக்கான கனேடிய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
நிலையத்தின் சட்டத்துறை பணிப்பாளர் மெட் இசென்பிராட் இந்தக்கோரிக்கை விடுத்துள்ளார்.
ரோய் சமாதானம், 2007ஆம் ஆண்டு இலங்கைக்கு திருமண விடயத்துக்காக பயணம் செய்திருந்தார்.
இதன்போது வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர், தம்மை கனேடிய புலி என்ற அடையாளப்படுத்தி சித்திரவதை செய்ததாக ரோய் சமாதானம் தமது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.