இலங்கை, கட்டாரில் இருந்து இயற்கை வாயுவை இறக்குமதி செய்ய அதிக அக்கறை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர திட்டமிடல் மற்றும் நீர்விநியோகத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கல்ப் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த இறக்குமதிக்காக தற்போதைக்காக இரண்டு, 300 மெகாவோட்ஸ் இயற்கை வாயு பிறப்பாக்கிகளை அடையாளம் கண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.