ஆட்சிக்கவிழ்ப்பு மேற்கொள்ளப்படும் என்றுக்கூறி படையினரை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க கோரியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, நடைமுறை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு நிகழலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக்கருத்துக்கு பதில் வழங்கும்வகையிலேயே எஸ் பி திஸாநாயக்க, தமது கருத்தை வெளியிட்டார்.
தினேஸ் குணவர்த்தனவின் கருத்து எதிர்ப்பார்க்காத மோசமான கருத்து என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தற்போதைய அரசாங்கம் சர்வதேசத்துடன் கொண்டுள்ள உறவுகளின் அடிப்படையில் இராணுவப்புரட்சி என்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்றும் அமைச்சர் திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.