இலங்கையின் பொருளாதார செயல்பாடுகள் – சர்வதேச நாணய நிதியம் திருப்தி

325 0

international-monetary-fund-imf-logo-at-hq-415x260இலங்கையின் பொருளாதார செயல்பாடுகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் திருப்தி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இதனை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மேலும் சுமார் 16 கோடியே 26 லட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய முன்னர் வழங்கப்பட்ட கடனுடன் சேர்த்து சுமார் 32 கோடியே 51 லட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறும் என நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பினையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக துண்டு விழும் தொகையினை மட்டுப்படுத்துவது மற்றும் அந்நிய செலாவணி சேமிப்பினை உயர்த்துவது போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.