இனவாதத்தை தோற்றுவிப்பவர்களை கைதுசெய்யுங்கள் – பிரதமர்

463 0

rwtc324இன மற்றும் மதவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் காவல்துறையினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

களுத்துரை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

கடந்த காலங்களில் இனவாதத்தினாலேயே நாடு பிளவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இத்தகைய சூழலை மீண்டும் ஏற்படுத்த இடமளிக்க முடியாது.

எனவே நாட்டின் நலத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.