சென்னையில் இன்று 8-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் ரூ. 79.53-க்கும், டீசல் ரூஃ 72.18-க்கும் விற்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றப்படாமல் இருந்தது. ஆனால் கடந்த வாரத்தில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையில் 54 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 79.53-க்கும், டீசல் விலையில் 54 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 72.18-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.