ஓகஸ்ட் மாதம் விமான நிலையத்தை திறக்க எதிர்பார்ப்பு

251 0

சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக, ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர், விமான நிலையத்தை திறக்க எதிர்பார்த்துள்ளதாக, சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தை திறக்க முன்னர், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.